Newsroom

நெப்போலியன் நடித்த ஆங்கில படம் வெளியானது

நெப்போலியன் நடித்த ஆங்கில படம் வெளிநாட்டில் வெளியானது

டெல் கணேசன் தயாரிப்பில், நெப்போலியனின் நடித்த ஆங்கிலப் படம் 'டெவில்ஸ் நைட்' . இதில் அவருடன் ஜெஸி ஜென்ஸன் மற்றும் நாதன் கேன் மாதெர்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஆரோன் ஹெர்மன் ருஸ்மேன் எழுதியிருக்கும் திரைக்கதையை ஸாம் லோகன் காலெகி இயக்கியிருக்கிறார்.

கிரைம் த்ரில்லர் பாணிப் படம் இது. டெட்ராய்ட்டை அடுத்திருக்கும் சிறிய நகரம் ஒன்றில் தொடர்ந்து கொலைகள் நடப்பதையும் அதை இரு காவல் துறை அதிகாரிகள் துப்பறிவதும் தான் கதை. இந்த படம் நேற்று அமெரிக்கா மற்றும் கனடாவில் அமேசான், ஆப்பிள், பன்டாங்கோ, நவ், வுடு உள்ளிட்ட இணையதளங்கள் மற்றும் டிவிடியில் வெளியானது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தமிழ்நாட்டில் வெளிவருகிறது.
 

Watch at Amazon  Watch at vudu



நன்றி தினமலர்

©2023 Actor Nepoleon. All Rights Reserved. Designed By Jeevan Technologies