Newsroom

actor-nepoleon-receives-first-dose-of-Covid19-vaccine

கொரோனா தடுப்பு ஊசியை எல்லோரும் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும் என திரு நெப்போலியன் மக்களுக்கு வேண்டுகோள்

நமது நலனிற்காகவும் நம் குடும்பத்தையும், நம்மைச் சார்ந்தவர்களையும், நம் நாட்டு மக்களையும் பாதுகாக்க, நம் நாட்டில் மேலும் இந்த கொரோனா தொடர் தொற்று பரவாமல் இருக்க நாம் அவசியம் இந்த தடுப்பு ஊசியை எல்லோரும் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும்...!
 
இந்த மாதம் March 8 ஆம் தேதியன்று முதல் தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டேன்..! இம் மாதம் இறுதியில் இரண்டாவது தடுப்பு ஊசியை போட்டிக்கொள்ள வேண்டும்..! அரசு நம் நன்மைக்காகத்தான் சொல்கிறார்கள் என்பதை உணர்ந்து அனைவரும் COVID-19 Vaccine தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்...!

படப்பிடிப்புக்காக நான் கிட்டத்தட்ட இரண்டு மாதம் இந்தியாவில் இருந்தேன் நான் குடும்பத்தோடு வாழும் அமெரிக்காவிக்கு March 5 ஆம் தேதியன்று வீடு திரும்பினேன் வந்தவுடன் கொரோனா தொற்று நோய் தடுக்கும் விதமாக எங்கள் குடும்பத்தில் அனைவரும் Vaccine போட்டுக்கொண்டோம்..!
 
©2025 Actor Nepoleon. All Rights Reserved. Designed By Jeevan Technologies