Newsroom

my hearty congratulations on all the elected members

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

தமிழ்நாட்டில் சமீலத்தில் 2021 ஏப்ரல் மாதம் நடத்த சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது..!

இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் திமுக 132 இடங்களில் வெற்றி பெற்று. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதர்க்கான அதிகாரம் பெற்று, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது..!

திமுக கூட்டணியில் இடம் பெற்ற அனைத்து கட்சிகளும் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது...!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கின்ற திமுகவின் தலைவர், அண்ணன் தளபதி அவர்களுக்கும், அமைச்சராக பொறுப்பேற்க இருக்கின்ற திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கும், எதிர்கட்சித் தலைவராகப் போகின்ற அண்ணன் EPS அவர்களுக்கும், 5 ஆண்டுகள் மக்கள் பணியாற்றப் போகின்ற, வெற்றிபெற்ற, திமுக மற்றும்,

அணைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்....!

"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு"...!

என்றும் அன்புடன்.
உங்கள் - நெப்போலியன் துரைசாமி

©2025 Actor Nepoleon. All Rights Reserved. Designed By Jeevan Technologies